இசையில்
தான் காதலா .?? இல்லாவிடில் காதலால் தான் இசையா
?? இரெண்டுமே
ஒன்றுடன் ஒன்று பிண்ணி பிணைந்தது
தான் என்னை பொறுத்தவரை .
எவ்வளவு
தான் மனதில் கடினமான ரணங்கள்
இருப்பினும் இல்லையேல் மனம் ஒரு ஆனந்தகடலில்
மிதக்கும் போதும் அதனை அனுபவிக்க
செய்கிறது இசை தான் .
சிலருக்கு
துள்ளல் , சிலருக்கு மெல்லிசை எனக்கு எப்போதும் மெல்லிசை
தான்.
முதல் காதல் ( ஓ ஓ ஓ நீங்க என்ன யோசிக்கிறிங்க ..???...இது பள்ளி காதல் பள்ளிக்காலம் தரம் 6-7 இருக்கும் என்னுள் உதித்த காதல்)
என்னில் மலர்ந்த போது முணுமுணுத்த
பாடல்
முதல் காதல் ( ஓ ஓ ஓ நீங்க என்ன யோசிக்கிறிங்க ..???...இது பள்ளி காதல் பள்ளிக்காலம் தரம் 6-7 இருக்கும் என்னுள் உதித்த காதல்)
அப்போது எல்லாம்
அவள் பாடசாளை வந்தாலும் , அவளுடன் கதைத்து
கொண்டு இருக்கும் போதும் கதைப்பதற்கு நிறைய சந்தர்ப்பம் கிடைக்கும் காரணம் இருவரும் ஒரே
வகுப்பு ,
இந்த வரிகள் அதிகம் என்னை
ரசிக்க செய்த தருணம்
வீசிப்போன
புயலில் என் வேர்கள் சாய
வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன்
காதல் சொல்ல என் இதயம்
கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில்
விழுந்ததடி
இது ஒரு
பாடல் இதை தவிர இன்னும்
அதிக காதல் மெல்லிசைகள் நான்
கேட்டு ரசித்த காலம் என்னுல்
என்னை அறியாமல் இசையில் ஓர் காதல்
(ம் ம் ம் ..நீங்க
யோசிக்கிறிங்க இவன் அப்ப அவளை
காதலிக்கவில்லையா :-/.. நான்
தானே முதலே சொன்னேன் பள்ளிக்காதல்
அது படலை வரை தான்
)
இன்று வரை என்னுள் என்னை
அறியாமல் மெல்லிசையில் ஈர்ப்பு ,
எதிர் காலத்தில் ஓர் ஆசை நானும்
என் காதலி / துணைவி / மனைவி (ஓ ஓ ஓ கொஞ்சம்
இருங்க இது இன்னும் மூன்று வருடத்தின் பின்) உடன் காரில் ஓர் அழகான
பச்சை மரஞ் சோலைகள் சூழ்ந்த
மலைக்குன்றில் மெல் பயணம் செய்ய வேணும்
, வண்டியில்(Toyota ___ )
அதிசயத்தை
காதல் செய்யும்
இரண்டும்
கைகோர்த்து சேர்ந்தது
இடையில்
பொய் பூடு போனது






.jpg)


0 comments:
Post a Comment