காதல் அழகியதொரு உணர்வு , அதனால் போலும் காதலிப்போர் போல் உலகில் நல்ல கவிஞர்கள் இல்லை என்பார் போலும் ..
ஒரு நாள் இரவு புகையிரத பயணம் அதுவும் தனிமையில் கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியாவுக்கு ,
இரவு 9.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தை அடைந்தேன் .புகையிரத பயணச் சீட்டை பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தேன் . முன்றாவது மேடையில் உள்ள ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டேன் .
பயணிகளால் நிறைந்து இருந்தது ஏன் எனில் அது ஓர் விடுமுறை காலம் .
கை தொலைபேசி யை ( hand phone Nokia N72) எடுத்து நேரத்தை பார்த்தேன் மணி இரவு 9.50 இருக்கும் ஒலிபெருக்கியில் "கொழும்ப சிட வவுனியா தக்வா யன யாழ்தேவி தும்பிறிய ......" கேட்டதும் எல்லாரும் எழுந்து நின்றனர். நானும் எழுந்து முன்றாம் வகுப்பு நிற்கும் இடமான நுழைவாசழலிருந்து சற்று தொலைவில் நின்றேன் .
புகையிரதும் தரித்து நிற்க முன்னரே அனைவரும் பாய்ந்து ஏறினார்கள் நானும் ஏறி ஒரு மாதிரி தேடி ஓர் யன்னல் ஓர இருக்கையை பிடித்து அமர்ந்து கொண்டேன் .
"எனக்கும் எங்கு பயணம் செய்வதாய் இருந்தாலும் யன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தால் அதில் ஓர் தனி சுகம் "
என் அருகில் சில சகோதர மொழி பேசுவோர் அமர்ந்தனர் . மீண்டும் கை தொலைபேசி யை ( hand phone Nokia N72)நேரத்தை பார்த்தேன் மணி இரவு 10.10 இருக்கும் , இன்னும் இருபது நிமிடம் இருக்கிறது புகையிரதம் பயணிக்க , நானும் புகையிரத மேடையும் புகையிரத்துக்குள் நடக்கும் பயணிகளின் தடுமாற்றத்தையும் , பயணத்தின் போதான சலனத்தையும் பார்த்து கொண்டே .. ..
மீண்டும் ஒலி பெருக்கியில் "கொழும்ப சிட வவுனியா தக்வா யன யாழ்தேவி தும்பிறிய ......" புகையிரதம் ஒலி எழுப்பியவாறு மெல்ல நகர்ந்தது .
நானும் என் பாக்கில் இருந்து ஹீட்போனே (Head phone) எடுத்து காதில் மாட்டினேன் .
" அதுவும் என் கைத்தொலைபேசியில் எல்லாமே காதல் மெல்லிசை பாடல்கள் என்னுடன் பழகிய நண்பர்களுக்கு தெரியும் .."
யன்னலில் கையை வைத்து சற்று தலையை சாய்த்து வெளியே பார்த்து வாறே படுத்தேன் .அடுத்த புகையிரத நிலையம் மருதாண வந்தது .அதில் இருந்தும் மெதுவாக பயணத்தை ஆரம்பித்தது .
யன்னல் ஓரத்தில் , அதிக காற்று என் மேல் விழ மெதுவாக என் கண்கள் மூடியது .இறுதியாக செவியில் ஒலித்த பாடல் "பூவே முதல் பூவே .."
ஒரு ஞாயிறு காலைப்பொழுது மணி 8 இருக்கும் நான் கடடிலில் நன்று உறங்கிக் கொண்டு இருந்தேன் . என்னை தட்டி "கயு கயு .." என்று எழுப்பினாள் , நானோ மறு பக்கம் திரும்பி மீண்டும் உறக்கத்தில் மீண்டும் என் முதுகில் தட்டி "கயு ..கயு .."என்று எழுப்ப நான் அவளை பார்த்தேன்.அவள் என்னை பார்த்து ஒரு சிரிப்பு .. ம்ம் .ம்ம் ...
TH : எழும்பண்ட 8 மணி ஆயிட்டு இன்னும் நித்திரை கொள்ளுறாய்
KA : போடி நானே இன்றைக்கு தான் நித்திரை கொள்ளுறன் நீயும் வேணும் என்டா நித்திரை கொள்
என்னை பிடித்து தள்ளி குளியலறைக்குள் இழுத்து விட்டால் .
KA : விடடி விடடி ....
TH : போய் முதல குளியட ..
என்றவரே என்னை தள்ளி குளியல் அறைக்குள் மூடினால் ..
KA : நில்லு குளிச்சிட்டு வாறன் ..
TH : வாய மூடிட்டு முதல குளியடா ..
குளித்து வந்ததும் நான் வீட்டு கோலில் இருக்கும் DVD Player ரை ON பண்ணினேன் அதில் ஒலித்த பாடல் "சகியே ..சகியே .."போய் கதிரையில் அமர்ந்தேன் . அப்போது அவள் கையில் தேனீர் கோப்பையுடன் வந்து ..
TH : இந்தாட முதல்ல இத குடிடா ..
நானோ அவள் தேனீர் கோப்பை வந்ததும் என் மனதில் "அழகான மனைவி /காதலி /துணைவி அமைந்தாலே வாழ்க்கை இன்பம் "
KA : ம்ம் ..இங்க வைத்திட்டு போடி ..
TH : நீ குடிச்சிட்டு வாடா ..நாங்க இன்றைக்கு படம் பார்க்க போகனும் .
என்று சொன்னவாறு அறைக்குள் போனாள்.
KA : எழாது போடி .. நான் வரே இல்ல .
TH : கயு நீ வர மாட்டியா .. என்றவாறே சிணுங்கினால் ...
எனக்கு அவளின் சிணுங்களில் ஓர் தனி சந்தோசம் ..
KA : வாறேன் போவம் ..
என்றவுடன் அறைக்குள் போய் ஒரு இளம் நீல சுடிதார் அணிந்து கொண்டு வந்தாள் .. நான் அவளை இறுக்கி அணைத்தபடி ஓர் முத்தம் ..
அப்போது Woofer speaker இல் "துள்ளி துள்ளி வரும் காற்றே .. " ..
TH : போட போய் உடுப்ப மாத்திட்டு வா ...
நானோ போக மனம் இல்லாமல் அறைக்குள் போக ..
என்ட முதுகுல தட்டி "மல்லி டிக்கெட் ஏக்க தெண்ட ..."
யுகங்கள் பல காத்து இருந்தாலும் இவள் தான் என் காதலி / மனைவி / துணைவி







.jpg)





4 comments:
thambi nenga inum valaronum.... athu sri yarda antha th??? bavana enda bv samantha enda sm th enda thamannava??
:P:P.. th enda thamanna illai boss athu vera oru short code ... neram kaikudinaa ellam sollalam
சும்மா போங்க தம்பி ஊர்ருக்க பொய் நம்ல பத்தி கேட்டுபாருங்க. அப்துல்கலாம் கனவு கானசொன்னது உங்களுக்கு காதலபோச்சு..... nice உங்களிட்ட இருந்து இன்னும் எதிர்பாகிறம்
Mmm ...ungala patti urla kekkalam but enth urla endu sonna nallme ungalukku than rendu ur irukke ..!!
DR.A.j sonna mathiriye naangalum kankirom kanavu ...but namakku ithu than mudiyum so itha pttiye kanavu kaankiram boss..
தெய்வீக காதல் .. boss naama feel pannira ellam ..தெய்வீக காதல் ...
Post a Comment