Tuesday, December 18, 2012

மாயனில்





மாயனில் மூழ்கிய மார்கழி மாதம்

மனிதனின் பகுத்தறிவின் சக்தியால் 
கூட பகுத்தறிய முடியாமால் 
தவிக்கும்பல உளம்

விஞ்ஞானம் கூடகணித்ததோ 
இல்லையேல் மறைக்கிறதோ 
என எண்ண தோன்றுகிறது 

மழை கூட நிறமாலையின் நிறத்தை 
உள் வாங்கி பொழிய 
விழி பிதுங்க சிந்திக்கிறது
 மனித குலம் 

மார்கழி இருபத்தொன்று 
நெருங்க காணும் 
மனித வதனங்களின் - வடிவகள்



காதலியை தேடிய புது 
காதல் சோடிகளின் -முகங்கள் ,

இல்லறத்தில் இணைந்த 
புதுமன தம்பதிகளின் -முகங்கள் ,

கைபேசியில் முத்தமிட்டு
 உறவாடும் உறவுகளின் -முகங்கள்,

ஸ்கைப்பில்  வதனம் 
நோக்கி மகிழ்வுறும் -முகங்கள் ,

ஆலயங்களில் இறைவனை 
தேடும் ஒரு குழாமின் -முகங்கள் ,

செக்கனுக்கு மூன்று முறையாவது 
இறை நாமத்தை ஜெபிக்கும் -முகங்கள்,

ஈற்றில் உறவுகளுடன் இணைய 
துடிக்கும் -முகங்கள் ,



கால நிலைகூட மாயனுக்கு 
துணை  போக - சற்று வியந்தேன் 

எதுக்கும் அஞ்சாது தம் பொம்மைகளுடன்  
சிரித்து  கொண்டு விளையாடும்
 மழலையின்-   சிரிபொலியில்

விடை தெரியா புதுருக்காய் 
நானும்  (kayu) காத்திருக்கிறேன் - உங்களுடன்




















0 comments:

Post a Comment