Tuesday, July 31, 2012

வாழ்க்கை ஓர் ராட்டினமே ..

ராட்டினம்.." வாழ்க்கை ஓர் ராட்டினமே .."


தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைக்கிறார் புதுமுக இயக்குனர்  தங்கசாமி ராட்டினம் வாயிலாக .. இள  வயது காதலை ததுவருவமாய் செதுக்க  முயன்றார் .அதில் முன்றில் இரண்டு பகுதியை நிறைவேற்றியுள்ளார் , 






தூத்துக்குடி இலே கதைக்கு களமாக்கினார் . 


கதையின் கருவை மிகவும் அழாகாக சொல்ல முயல்கிறார் ரசிகர்களுக்கு "ஆழமான காதலின் வெற்றி அல்லது தோல்வியின் பின்னல் ஓர் காரணம் உண்டு அது உறவாகவோ அல்லது அதனையும் தாண்டியதாய் அமைகிறது  "







இயக்குனர் தயாரிப்பாளரை காப்பாற்ற சிறிதளவு இந்திய அரசியலையும் காமெடி க்கு இயக்குனர் நண்பனையும் பயன்படுத்தி உள்ளார் போல் ..






கல்லூரியை காதலுக்கு ஆரம்பமாய் கொண்ட பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் இத்திரைப்படத்தில் அதிகளவு யதார்த்தமாய் இருப்பதில் ஓரளவு இளவயதினருள் இடம் பிடிக்கும்  ..






இறுதில் அதிகளவு காதல்கள் தோல்விக்கு   காரணமாய் அமைந்த உறவு என்னும் பதத்தை கொண்டு படத்தை நிறைவு செய்கிறார் ..



நாயகன் லகுபரன் துணை இயக்குனர் ஆக கடமை ஆற்றியதால்  போல் தேவையான நேரங்களில் அடக்கமான நடிப்பை காட்டியுள்ளார் ..




நாயகி சுவாதி கல்லூரியில் படிக்கும் மாணவி போலே பிரம்மாதமான நடிப்பு தேவையான நேரங்கில் (காதலில் அதிகம் பேசுவதே விழிகள் தான் )  விழிகளின் அசைவில் பேசுகிறார் பிரமாதம் ,


 தமிழ் பெண்ணுக்கே உரிய சுடி தாரில் .., அவரின் எளிமையான நடிப்புக்கு சபாஸ்  தான் ....



படப்பிடிப்பு மிகவும் எளிமையாகவும் அழகாவும் கையாண்டுள்ளார் கேமரா மான் அதுவும் பாடல்களில் மிகவும் எளிமை யதார்த்தத்தையும் அழகாய் திரைக்குள் கொண்டு வந்துள்ளார் அதுக்கு அவருக்கு சபாஸ் தான் ..



மனு  ரமேசன் இசையமைப்பாளர் தேவையான இடங்களில் மிக அழகான பின்னணி  இசை , பாடல்களில் எதோ கேட்ட இசையை  இருந்தாலும் காட்சிகளுடன் பின்னிய போது அவ்வளவாய் தென்படவில்லை ..

"ஏனோ என் இதயம்" பாடல் இசையும் வரியும் வரைவதற்கு என்னில் வார்த்தையில்லை ..

.இறகு ஒண்டு விழுந்து விட்டல்
 வானத்தில் பறந்திடலாம் 
சிறகு ஒன்று விழும் போது 
இந்த பயணங்கள் தொடர்வதில்லை ..



அழகான காதல் சித்திரம் ..எவர் எல்லாம் தமது காதலை ஜெய் பதற்காய் போராடுகின்றனர்(நானும் ஒருவன் ) , எவர் தம் காதல் நிறைவேற்ற முடியாமல் தினமும் தவிக்கின்றனர் அவர்கள் மனதில் என்றும் இடம் பிடுக்கும் 

0 comments:

Post a Comment