Saturday, June 22, 2013

தீயா வேலை செய்யோணும் குமாரு

எதிர்பார்ப்பு அதிகம் ,சாந்தானம் கலக்குவார் என்ற ஒரே நம்பிக்கையுடன் சென்றேன் ஈரோஸ் க்கு  , சிறிது தாமதம் எழுத்து ஓட்டம் ஓடும் தியடோரில் சென்றோம் .



கதை ,திரைக்கதை, இயக்கம் சுந்தர் சி  என்பதால் அவரின் பாணியில் ஆனா நையாண்டி , காமெடி குறைவில்லாத கதை நகர்வு என்று தான் நினைக்க தோன்றியது , கதை கரு இலகுவானது ஒன்று அதை கூறிய விதம் அழகு , இருப்பினும் எனக்கு திரைப்படத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது பல பொழுது எனக்கு சந்தேகம் எழுந்தது , சாந்தானம் இத்திரைப்படத்துக்கு கதாநாயகனா ?? சித்தார்த் கதாநாயகனா ??..




ஏன்னெனில் திரைப்படம் தொடக்கி, முதல் 20 நிமிடம் தவிர முழு திரைப்படத்திலும் அவரின் நடிப்பு தான் .

என்னோடு படம் பார்க்க வந்த நண்பன்  SAM சொன்னான் "சுந்தர் சி  ஒவ்வொரு சீன் எடுக்கும் போது அவருக்கே விளங்கி இருக்காது படம் முடிஞ்சு எடிட்டிங் செய்யும் போது தான் ஜோசித்திருப்பார்   என்ன கொடுமை சார் படம் முழுதும் சாந்தானம் "

சாந்தானம் , நடிப்பு சொல்லவே வேண்டாம் கலக்கோ கலக்கி இருக்கிறார் . அது தான் இப்ப எல்லாம் இயக்குனர்களுக்கு சாந்தானத்தை தமது படங்களுக்கு உள்வாங்குவதில் பெரும் சிக்கலில் உள்ளனர் . பல படங்கள் அவரின் நேர வசதிக்காய் தாமதித்தும் வெளியிடபடுகின்றது .


எனக்கு சாந்தானத்தில் பிடித்தது  உரையாடல் வீச்சு (dialog delivery) மற்றும் timing  அவரிடம் என்னை கவர்ந்தது . அவர் தமக்கு கொடுத்த வேலையை முகவும் நேர்த்திய செய்துள்ளார் .அவருக்கு எற்றவாறு Dialogue எழுதிய Nalan Kumarasamy மற்றும் Venkat Raghavan ஒரு சபாஸ் தான்

"" தேங்காய் பறிக்கொனும் எண்டா தென்னை மரம் ஏறோணும் குமாரு ""

சித்தார்த் , திரைக்கதை கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருந்தியுள்ளது , என்னெனில் எப்போதுமே ஒரு பாவப்பட்ட சுபாவம் அவரிடம் தான் இருக்கு மிகை இல்லாத யதார்த்தமான நடிப்பு படத்துக்கு மிகவும் வலு சேர்த்துள்ளது .

கதாநாயகி Hansika Motwani , கதாபாத்திரத்து க்கு ஏற்பதாய் அமையவில்லை என்று எனக்கு தோன்றுகிறது . IT  Firm  amala paul மற்றும் nayantara பார்த்திட்டு இவா பார்க்க எனக்கு செட் ஆகேல்ல போல் தோன்றியது .



இசை சி.சத்யா  , இதமான இசை தேவையா இடங்களில் அதிக குத்து ,அதை கேட்ட போது யுவன் தானோ என்று ஜோசித்தேன் ,அதுவும் இந்த பாடல்

"அழகென்றால் அவள்தானோ..அழகென்றால் அவள்தானோ"

பாடல்கள் படமாக்க பட்ட இடங்கள் யதார்த்தமான இடங்கள் தான் அதை போன்று கேமரா வில் எதுவும் புதுமை இல்லை என எனக்கு என்ன தோன்றியது . இருப்பினும் அது திரைப்படத்துக்கு பொருந்தியுள்ளது .


தயாரிப்பாளரை பொருத்த மட்டில் இத்திரைப்படம் நிச்சியம் திருப்த்தி ஆக்கும் என்பதில் ஐயமில்லை .

ஒரு கலக்கல் தான் 


0 comments:

Post a Comment