காலை 11.30
மணிக்கு ஆட்டோவில்
புறக்கோட்டைக்கு ஒரு பயணம் ,அதுவும் ஷாப்பிங் (shopping) போனோம் ,
முதல் ஒரு டெக்ஸ்டைல் main street ல இருக்கிற ஒரு பிரபலமானா கடை , நானும் அவையை விட்டுட்டு வேறு ஒரு கடைக்கு போனேன் , நான் கடைக்கு பொய் வந்திட்டேன் ஒன்றறை மணித்தியாலத்தில இருந்தாலும் டெக்ஸ்டைல்க்கு போனவை இன்னும் வரவில்லை , நானும் அந்த கடைக்குள்ள போனேன் , நான்கு சுடிதார் எடுத்து வைத்து கொண்டு இருக்கினம் , ஒரு சுடிதார் சராசரி விலை 6000/= - 7000/=
முதல் ஒரு டெக்ஸ்டைல் main street ல இருக்கிற ஒரு பிரபலமானா கடை , நானும் அவையை விட்டுட்டு வேறு ஒரு கடைக்கு போனேன் , நான் கடைக்கு பொய் வந்திட்டேன் ஒன்றறை மணித்தியாலத்தில இருந்தாலும் டெக்ஸ்டைல்க்கு போனவை இன்னும் வரவில்லை , நானும் அந்த கடைக்குள்ள போனேன் , நான்கு சுடிதார் எடுத்து வைத்து கொண்டு இருக்கினம் , ஒரு சுடிதார் சராசரி விலை 6000/= - 7000/=
அந்த கடையில
ஏறத்தாழ ரெண்டு மணித்தியாலங்கள் நானும் நின்றேன் , அங்க ஒரு மாதிரி
முடிச்சு கொண்டு வந்தாங்க இருப்பினும் மறக்காமா
அங்க ஒரு பெரிய பில் வைத்திட்டு தான் வந்தவை
"அப்ப இப்ப யாவது முடிச்சிட்டு
வந்திட்டினம் என்று நினைக்க "
அந்த கடையில
டிசைன் சிலதுகள் பிடிக்கேல்ல என்று சொல்லி இன்னுமொரு கடைக்கு போகுனும் என்று
சொன்னாங்க ஒகே போவம் என்று போனேன் அதுவுமும் main street அடுத்த பிரபலமான கடை அதுக்கும் போய் ஒரு
மணித்தியலத்தில வந்தாங்க நானும் வாங்கின உடுப்பு பாக் bag எல்லாத்தையும் வைத்துக் கொண்டு வெளியில
நின்றேன்
வெளியே வந்து
அங்கயும் selection சரியில்லை என்று
சொல்லி வெளியில வந்து சொன்னாங்க
எனக்குள்ளே நானே
கேட்டு கொண்டேன்.
"இந்த ladies
ஒட மட்டும் textile
கடை பக்கம் இனி மேல் வர
கூடாது சாமி , இது உனக்கு தேவை கயு "
Mind voice "கயு இதுக்கே
இப்பிடி புலம்பின பின்னால இத விட வேலை இருக்கு "
ஒரு மாதிரி
மூன்று அல்லது நான்கு கடைகளுக்கு ஏறி முடிச்சு ,ஒரு மாதிரி shopping முடிச்சிட்டாங்க சரி ஒகே போகலாம் என்று Three
wheeler ஒன்றை நிப்பாட்டினேன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"அண்ணே meter பூட்டி இருக்கா "
"ஓ ஓ தம்பி , எங்க போகோணும் ?"
"தேஹிவல
க்கு போகனும் "
ஒரு மாதிரி ஏறி
வந்து அந்த ஹில்டன் முன்னால வந்தோன நேரே வார lotus road வந்து Presidential Secretariat Office போக எழாது ஆதலால் lake house round board ல வந்து தான் திரும்பி
போகனும் galle face ல போற என்றால் ,
three wheel கார அண்ணே கங்காராம ரோட்ல விட்டார் நான்
சொன்னேன் அண்ணே galle face ரோட்டல போகலாமே ,
தம்பி எல்லாம் ஒன்று தான்
உடனே நான்
என்னுள்ளே
"அண்ணே எனக்கு
கொழும்பு சுற்றி காட்ட போறாரோ "
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"தம்பி நான்
தேஹிவல hire ஒன்று
கிடைத்ததும் சந்தோசமாக தான் வந்தேன் .."
நான் காலையில
இருந்து main streetல சுற்றி கொண்டு
இருக்கேன் ஆனாலும் 270/= தான் கிடைச்சது
தேஹிவல hire என்றவுடன்
சந்தோசமாய் தான் வந்தேன்
நானும் முதல் ஒரு
நல்லாய் காசு வைத்து செலவலித்தவன் , ஆனாலும் இப்ப கொஞ்சம் கஷ்டபட்டு இருக்கேன் , காலையில வரக்குள்ள எனது மகன் 15 வயது
"வாப்பா காசு
இருந்தா தாங்க சாப்பாடு வேண்டோணும் "
"இல்லை .மகன் நான்
hire போய்ட்டு பகல் வரக்குள்ள
சாப்பாடு வாங்கிட்டு வாறன் "
"மாரி பிஸ்கட்
வாங்கவது காசு தாங்கலேன் "
இப்ப தானே இல்லை
என்று சொன்னேன் என்று அடித்தேன் ,அப்ப எனது மனைவி
என்னை ஏசினார் மற்றும் குழம்பினார் .
ஏன் என்றா அவர்
ஒரு மன நோயாளி ,கடந்த இரு
வருடங்களுக்கு முன் ஏற்ப்பட்டது , மனைவியை கடந்த
ரெண்டு வருடமாய் nawalaoka hospital ல Chanel பண்ணி காட்டி
வாறேன் ,
முதல் காட்ட
போகக்குள்ள channel பண்ண 850/=
charge பண்ணுவாங்க ஆனா இப்ப 1950/= charge பண்ணிறாங்க என்று சொல்லி ஒரு கறுப்பு பையை எடுத்து எனக்கு காட்டினார்
மனைவியின் medical
report அதில் இருந்தது
மனைவிக்கும்
இன்னுமொருக்கு channel பண்ணோணும் ஆனால்
அதுக்கும் 1950/= வேணும் , அதுக்கும் காசு இல்லை தம்பி , வீட்டுக்கு பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம்
சொல்லுறாங்க
"இவங்கள கொண்டே
அங்கொடை ல விடுங்க "
ஆனா எனது மகள் வயது 18 அவா சொல்லுறா
"அம்மா வை அங்கொட
யில கொண்டே விட வேண்டாம் "
நானும் அவரின்
கதையில் மனம் உருகி கேட்டு கொண்டு இருந்தேன் , அப்போது இடத்தை பார்த்தேன் கொள்ளுப்பிட்டி
"தம்பி நான்
சொல்லுற பற்றி எதுவும் நினைக்காதிங்க என்ட மனக்கவலையை சொல்லுறேன் "
நான் எவ்வளவு
மருந்து எனது மனைவிக்கு வாங்கினேன் என்று ஒரு pharmacy ட பெயர் சொன்னார் எனக்கு தெரியவில்லை அது
கொடஹென இருக்கு என்று சொன்னார்
அங்க கேட்ட தெரியும் என்றார்
நான் அப்போது
நிறைய பணம் இருந்து மருந்து வேண்டினேன் ஆனா இப்ப கொஞ்சம் கஷ்டப் பட்டு போனேன் , அப்ப இறைவன் வாரி கொடுத்தான் செலவளித்தேன் அதுதான் போல இறைவன் என்னை கஷ்ட
படுத்திறான்
இருந்தாலும்
இன்றும் நான் பள்ளிக்கு போறேன் ஏன்னெனில் எல்லாம் அவன் வழி என்று சொன்னார்.
" இந்த காசில தான்
இரண்டு சாப்பாட்டு பாசல் வாங்கி கொண்டு வீடுக்கு போய் குடுக்கோணும் என்று சொல்லி "
தனது பாக்கெட் ல இருந்த ஒரு வெள்ளை துணியை எடுத்து தனது விழிகளை துடைத்தார் . Three wheel பம்பலபிடிய சந்தில சிக்னல் லைட் ல நின்றது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதுக்கு பிறகு
ஒரு சம்பாஷனையும் இல்லை வீடு வந்தது , meter 436 /= காட்டியது
நான் 450 /= குடுத்திட்டு இறங்கினேன்
பணத்திற்கு அலைந்திடும் வாழ்க்கை
Note : கற்பனை கலக்காத
உண்மையான சம்பவம் பணத்தின் வலிமையை உணர்த்திய ஒரு Three wheeler பயணம் .













.jpg)
.jpg)

.jpg)
.jpg)

