வைரமுத்தின் வரிகள்

விடியாது இரவென்று எதுவுமில்லை ,முடியாத துன்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை,வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

கண்ணதாசனின் வரிகள்

உன்னை அறிந்தால் -நீ உன்னைஅறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

தத்துவம்

வெற்றி பெறுவது மிகவும் எளிதானது . என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய் .செய்வதை விரும்பி செய் .செய்வதை நம்பிக்கையோடு செய்.

புத்தரின் வரிகள்

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

தத்துவம்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால், நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.

Saturday, March 30, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா (KbKr)


பண்டிராஜ்ட  படத்துக்குரிய எதிர் பார்ப்புடன் போனேன் பார்க்க ஏன் எனில் முதல் படம் பசங்க   பல  விருதுகளுக்கு படம் தெரிவானமை இது அவரின் நான்காவது படம் .


இருந்தாலும் மிகவும் யதார்த்தமாய் நடிக்கும் விமல் , பேசி பேசியே காமெடி அடிக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காத என்ற எதிர் பார்ப்புடனும் சென்றேன்.


(எதிர் பார்க்கேல்ல விமல் அண்ணாவும் படத்துக்கு வந்து இருந்தார் .. ஆதலால் ஒரு கோக் ப்ரீய கிடைச்சது)

பட பேயர் ஓட்டம் போகுதோ இல்லையோ மூன்று பேரும் தொடங்கிட்டாங்க ,

இயக்குனர் பாண்டிராஜ் படத்தில ஒவ்வொரு வசனத்தையும் எப்பிடி  தான் யோசித்து எழுதினார் என்று எண்ண தோன்றுது  .ஓவ்வொரு வசனுமும் காமெடி ஆகவும் நட முறை வாழ்க்கையில் இளைஜர்கள் பயன் படுத்துவதுமாய் அமைத்துள்ளது அதுக்கு அவருக்கு நிச்சியம் ஒரு பெரிய சபாஸ் தான்

திரைக்கதை நகர்வு ஆரம்பம் முதல்  இறுதி பதிநைந்து நிமிடம் தவிர ஒரே கமெடி அது சில இடங்கலில் சோர்வடைய செய்தாலும் பல இடங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் (ஒரு வேளை தமிழ் படம்  வர முதல் இது வந்து இருந்தா நல்லா இருந்திருக்கும் என எண்ண தோன்றுகிறது )

இறுதி பதினைந்து நிமிடம் சென்டிமென்ட் காட்சி தேவை என்பதற்காய் காட்சியை உள்வாங்கி இருதார் போல் எண்ண தோன்றியது . அத்துடன் படம் முடிந்தது என்று நாமும் எழும்பினோம் மீண்டும் இறுதி பெயர் ஓட்டத்துடனும் காமெடி கலந்து படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடி ஆகவே நகர்த்தி விட்டார் .

யதார்த்தமான இடங்களில் மிகவும் எளிமையாய் காட்சிகளை படம் ஆக்கின கேமரா மன்னுக்கு ஒரு சபார்ஸ் தான் பாடல் காட்சியிலும் சரி அதுவும் சிவகார்த்திகேயன் Regina Cassandra  "சுட சுட தூறல்... "இனது டுயட் மிகவும் எளிமையான பாடல் அமைப்பு (என்னையும் அவாவோட  கொஞ்சம் பீல் பண்ண வைச்சிட்டு )



சிவா ,விமல் மற்றும் சூரி மூவரும் தமக்கு குடுத்த கடமையை நிறைவேற்றி உள்ளனர் சிவாக்கு பேசி பேசிக் கொல்வது கைவந்த கலை தான் மற்றவர்களும் அவருக்கு ஈடு கொடுத்து நடித்து உள்ளனர். (ஒரு வேளை நம்ம சிவா அண்ணாவுக்கும் அரசியல் ஆசை உள்ளதோ ...விடுங்க அண்ணே அரசியல் எல்லாம் சகஜம் ...) மற்ற துணை நடிகர்களும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் .











கதா   நாயகிகளான Bindu madhavi மற்றும் Regina Cassandraமிகவும் எளிமையனா நடிப்பு எனக்கு இருவரதும் எளிமையான தோற்றம் மிகவும் பிடித்துள்ளது ( ..எனக்கும் என்னவளை சுடிதாரில் பார்க்கிற ஒரு எண்ணம் என்னுள் ஓடியது ..ஒருவேளை எனக்கு சுடிதார் போடுற பெண்கள பிடிகிரதால போல ..) அதுவும்  Regina Cassandra  சிவாவுடனான ரோமன்ஸ் (ரோமன்ஸ் இல்லாடி காமெடி யா ஒரே கோன்புசே ) போது மற்றும் விமல கொவில முதல் Bindu Madhavi 
இவருக்குரிய சண்டை காட்சி தேவை இல்லாத ஒரு விஷயம் என எண்ண தோன்றியது சந்திக்கிற கணம் கண் துடிப்பு .

பார்வையில்ல காந்தம் வைச்சா
வெக்கம் அத தள்ளி வைச்ச
வில்லங்கமா புள்ளி வைச்சா


எனும் யுகபாரதியின் காதலியின் பார்வையின் ,சக்தியையும் (அந்த பார்வை ரொம்ப பவர் அனுபவப்பட்டவன் நான்)




என் உயிரின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
கயன் கண்ட பின்பே உன்னை கண்டேன்.

எனும் நா முத்துகுமாரின் தந்தை பற்றிய உருக்கமான வரிகளும்,

என்னுள் பதிந்த சில நடை முறை வாழ்க்கை வசனங்கள்


" செத்தா கூட கெத்த விட கூடா மச்சி.."

":இலட்சியத்தை விட்டாலும் லட்சத்தை விட கூடாது.."

"அரசியல் எல்லாம் சர்வ சாதாரணம் அப்ப.."



"சொத்த விட்டாலும் கெத்த விட கூடாது..."



"பட்ச்லோர் எல்லாம் குடும்பஸ்தன் ஆக விரும்புவான்
குடும்பஸ்தன் எல்லாம் பட்ச்லோர் ஆக விரும்புவான்..."


"எள்ளு எண்ணைக்கு காயுது எலிப்புழுக்கை என்னத்துக்கு காயுது.."

இவற்றுக்கு ஒரு சபாஸ் தான் . இருப்பினும்  அதிகம் ஒரே வசனத்தை திருமப் திருப்ப பயன் படுத்தி விட்டார் இயக்குனர் என எண்ண  தோன்றுது.


( Meநான் வைத்திய ரோட்டல போக போறேன்
Vimal Anna : இந்த பக்கம் எங்க வைத்திய ரோடு இருக்கு
Me : ஆமா இல்ல
Vimal Anna : தம்பி படம் பார்த்து ரொம்ப கோன்புஸ் ஆகிட்டார்.)

கேடி பில்லா பில்லாடி ரங்கா ஒரே தமாஸ் (பேசி பேசியே கொல்லுறாங்க..)

Friday, March 29, 2013

இசையும்.... !!! காதலும் ....!!


இசையில் தான் காதலா .?? இல்லாவிடில் காதலால் தான் இசையா ??  இரெண்டுமே ஒன்றுடன் ஒன்று பிண்ணி பிணைந்தது தான் என்னை பொறுத்தவரை .

எவ்வளவு தான் மனதில் கடினமான ரணங்கள் இருப்பினும் இல்லையேல் மனம் ஒரு ஆனந்தகடலில் மிதக்கும் போதும் அதனை அனுபவிக்க செய்கிறது இசை தான் .

சிலருக்கு துள்ளல் , சிலருக்கு மெல்லிசை எனக்கு எப்போதும் மெல்லிசை தான்.

முதல் காதல் (      நீங்க என்ன யோசிக்கிறிங்க ..???...இது  பள்ளி  காதல் பள்ளிக்காலம் தரம் 6-7 இருக்கும் என்னுள் உதித்த காதல்)
என்னில் மலர்ந்த போது முணுமுணுத்த பாடல்






அப்போது எல்லாம் அவள் பாடசாளை  வந்தாலும் , அவளுடன் கதைத்து கொண்டு இருக்கும் போதும் கதைப்பதற்கு  நிறைய சந்தர்ப்பம் கிடைக்கும் காரணம் இருவரும் ஒரே வகுப்பு ,

இந்த வரிகள் அதிகம் என்னை ரசிக்க செய்த தருணம்


வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி

இது  ஒரு பாடல் இதை தவிர இன்னும் அதிக காதல் மெல்லிசைகள் நான் கேட்டு ரசித்த காலம் என்னுல் என்னை அறியாமல் இசையில் ஓர் காதல் (ம் ம் ம் ..நீங்க யோசிக்கிறிங்க இவன் அப்ப அவளை காதலிக்கவில்லையா :-/..  நான் தானே முதலே சொன்னேன் பள்ளிக்காதல் அது படலை வரை தான் )

இன்று வரை என்னுள் என்னை அறியாமல் மெல்லிசையில் ஈர்ப்பு ,




எதிர் காலத்தில் ஓர் ஆசை நானும் என் காதலி / துணைவி / மனைவி (ஓ ஓ ஓ கொஞ்சம் இருங்க இது இன்னும் மூன்று வருடத்தின் பின்) உடன் காரில் ஓர் அழகான பச்சை மரஞ் சோலைகள் சூழ்ந்த மலைக்குன்றில் மெல் பயணம் செய்ய  வேணும் , வண்டியில்(Toyota ___ )



அதிசயத்தை காதல் செய்யும்
இரண்டும் கைகோர்த்து சேர்ந்தது
இடையில் பொய் பூடு போனது












Saturday, March 16, 2013

புகையிரத பயணம் ..

காதல் அழகியதொரு உணர்வு , அதனால் போலும் காதலிப்போர் போல் உலகில் நல்ல கவிஞர்கள் இல்லை என்பார் போலும் ..

  ஒரு நாள் இரவு புகையிரத பயணம் அதுவும் தனிமையில் கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியாவுக்கு , 

இரவு 9.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தை அடைந்தேன் .புகையிரத பயணச் சீட்டை பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தேன் . முன்றாவது மேடையில் உள்ள  ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டேன் . 



பயணிகளால் நிறைந்து இருந்தது ஏன் எனில் அது ஓர் விடுமுறை காலம் . 
கை தொலைபேசி யை ( hand phone Nokia N72) எடுத்து நேரத்தை பார்த்தேன் மணி இரவு 9.50 இருக்கும் ஒலிபெருக்கியில் "கொழும்ப சிட வவுனியா தக்வா  யன யாழ்தேவி தும்பிறிய ......" கேட்டதும் எல்லாரும் எழுந்து நின்றனர். நானும் எழுந்து முன்றாம் வகுப்பு நிற்கும்  இடமான நுழைவாசழலிருந்து சற்று தொலைவில் நின்றேன் .

புகையிரதும் தரித்து நிற்க முன்னரே அனைவரும் பாய்ந்து ஏறினார்கள் நானும் ஏறி ஒரு மாதிரி தேடி ஓர் யன்னல் ஓர இருக்கையை பிடித்து அமர்ந்து கொண்டேன் .

"எனக்கும்  எங்கு பயணம் செய்வதாய் இருந்தாலும் யன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தால் அதில் ஓர் தனி சுகம் "

என் அருகில் சில சகோதர மொழி பேசுவோர் அமர்ந்தனர் . மீண்டும் கை தொலைபேசி யை  ( hand phone Nokia N72)நேரத்தை பார்த்தேன் மணி இரவு 10.10  இருக்கும் , இன்னும் இருபது நிமிடம் இருக்கிறது புகையிரதம் பயணிக்க , நானும் புகையிரத மேடையும் புகையிரத்துக்குள் நடக்கும் பயணிகளின் தடுமாற்றத்தையும் , பயணத்தின் போதான சலனத்தையும் பார்த்து கொண்டே .. ..
மீண்டும் ஒலி பெருக்கியில் "கொழும்ப சிட வவுனியா தக்வா  யன யாழ்தேவி தும்பிறிய ......" புகையிரதம் ஒலி எழுப்பியவாறு மெல்ல  நகர்ந்தது . 


நானும் என் பாக்கில் இருந்து ஹீட்போனே (Head phone) எடுத்து காதில் மாட்டினேன் .

" அதுவும் என் கைத்தொலைபேசியில்  எல்லாமே காதல் மெல்லிசை  பாடல்கள் என்னுடன் பழகிய நண்பர்களுக்கு தெரியும் .." 

யன்னலில் கையை வைத்து சற்று தலையை சாய்த்து வெளியே பார்த்து வாறே படுத்தேன் .அடுத்த புகையிரத நிலையம் மருதாண வந்தது .அதில் இருந்தும் மெதுவாக பயணத்தை ஆரம்பித்தது .

யன்னல் ஓரத்தில் , அதிக காற்று என் மேல் விழ மெதுவாக என் கண்கள் மூடியது .இறுதியாக செவியில் ஒலித்த பாடல் "பூவே முதல் பூவே .."




      
ஒரு ஞாயிறு காலைப்பொழுது மணி 8 இருக்கும் நான் கடடிலில் நன்று உறங்கிக் கொண்டு இருந்தேன் . என்னை தட்டி "கயு கயு .." என்று எழுப்பினாள் , நானோ மறு  பக்கம் திரும்பி மீண்டும் உறக்கத்தில் மீண்டும் என் முதுகில் தட்டி "கயு ..கயு .."என்று எழுப்ப நான் அவளை பார்த்தேன்.அவள் என்னை பார்த்து ஒரு சிரிப்பு .. ம்ம் .ம்ம் ...




TH :  எழும்பண்ட 8 மணி ஆயிட்டு இன்னும் நித்திரை கொள்ளுறாய் 
KA : போடி நானே இன்றைக்கு தான் நித்திரை கொள்ளுறன் நீயும் வேணும்    என்டா நித்திரை கொள் 

என்னை பிடித்து தள்ளி குளியலறைக்குள் இழுத்து விட்டால் .

KA :  விடடி விடடி ....
TH : போய் முதல குளியட ..

என்றவரே என்னை தள்ளி குளியல் அறைக்குள் மூடினால் ..

KA : நில்லு குளிச்சிட்டு வாறன் ..
TH : வாய மூடிட்டு முதல குளியடா ..

குளித்து வந்ததும் நான் வீட்டு கோலில் இருக்கும் DVD Player ரை ON பண்ணினேன் அதில் ஒலித்த பாடல் "சகியே ..சகியே .."போய்  கதிரையில் அமர்ந்தேன் . அப்போது  அவள் கையில் தேனீர் கோப்பையுடன் வந்து ..



TH : இந்தாட முதல்ல இத குடிடா ..

நானோ அவள் தேனீர் கோப்பை வந்ததும் என் மனதில் "அழகான மனைவி /காதலி /துணைவி  அமைந்தாலே வாழ்க்கை இன்பம் "

KA : ம்ம் ..இங்க வைத்திட்டு போடி ..
TH : நீ குடிச்சிட்டு வாடா ..நாங்க இன்றைக்கு படம் பார்க்க போகனும் . 

என்று சொன்னவாறு அறைக்குள் போனாள்.

KA : எழாது போடி .. நான் வரே இல்ல .
TH : கயு நீ வர மாட்டியா .. என்றவாறே சிணுங்கினால் ...

எனக்கு அவளின் சிணுங்களில் ஓர் தனி சந்தோசம் ..

KA : வாறேன் போவம் ..

என்றவுடன் அறைக்குள் போய் ஒரு இளம் நீல சுடிதார் அணிந்து கொண்டு வந்தாள் .. நான் அவளை இறுக்கி அணைத்தபடி ஓர் முத்தம் ..


அப்போது Woofer speaker இல் "துள்ளி துள்ளி வரும் காற்றே .. " ..

TH : போட போய் உடுப்ப மாத்திட்டு வா ...

நானோ போக மனம்  இல்லாமல் அறைக்குள் போக ..

என்ட முதுகுல தட்டி "மல்லி டிக்கெட் ஏக்க தெண்ட ..."


யுகங்கள் பல காத்து இருந்தாலும் இவள் தான் என் காதலி / மனைவி / துணைவி