மாயனில் மூழ்கிய மார்கழி மாதம்
மனிதனின் பகுத்தறிவின் சக்தியால்
கூட பகுத்தறிய முடியாமால்
தவிக்கும்பல உளம்
விஞ்ஞானம் கூடகணித்ததோ
இல்லையேல் மறைக்கிறதோ
என எண்ண தோன்றுகிறது
மழை கூட நிறமாலையின் நிறத்தை
உள் வாங்கி பொழிய
விழி பிதுங்க சிந்திக்கிறது
மனித குலம்
மார்கழி இருபத்தொன்று
நெருங்க காணும்
காதலியை தேடிய புது
காதல் சோடிகளின் -முகங்கள் ,
இல்லறத்தில் இணைந்த
புதுமன தம்பதிகளின் -முகங்கள் ,
கைபேசியில் முத்தமிட்டு
உறவாடும் உறவுகளின் -முகங்கள்,
ஸ்கைப்பில் வதனம்
நோக்கி மகிழ்வுறும் -முகங்கள் ,
ஆலயங்களில் இறைவனை
தேடும் ஒரு குழாமின் -முகங்கள் ,
செக்கனுக்கு மூன்று முறையாவது
இறை நாமத்தை ஜெபிக்கும் -முகங்கள்,
ஈற்றில் உறவுகளுடன் இணைய
துடிக்கும் -முகங்கள் ,
கால நிலைகூட மாயனுக்கு
துணை போக - சற்று வியந்தேன்
எதுக்கும் அஞ்சாது தம் பொம்மைகளுடன்
சிரித்து கொண்டு விளையாடும்
















