வைரமுத்தின் வரிகள்

விடியாது இரவென்று எதுவுமில்லை ,முடியாத துன்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை,வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

கண்ணதாசனின் வரிகள்

உன்னை அறிந்தால் -நீ உன்னைஅறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

தத்துவம்

வெற்றி பெறுவது மிகவும் எளிதானது . என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய் .செய்வதை விரும்பி செய் .செய்வதை நம்பிக்கையோடு செய்.

புத்தரின் வரிகள்

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

தத்துவம்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால், நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.

Tuesday, December 18, 2012

மாயனில்





மாயனில் மூழ்கிய மார்கழி மாதம்

மனிதனின் பகுத்தறிவின் சக்தியால் 
கூட பகுத்தறிய முடியாமால் 
தவிக்கும்பல உளம்

விஞ்ஞானம் கூடகணித்ததோ 
இல்லையேல் மறைக்கிறதோ 
என எண்ண தோன்றுகிறது 

மழை கூட நிறமாலையின் நிறத்தை 
உள் வாங்கி பொழிய 
விழி பிதுங்க சிந்திக்கிறது
 மனித குலம் 

மார்கழி இருபத்தொன்று 
நெருங்க காணும் 
மனித வதனங்களின் - வடிவகள்



காதலியை தேடிய புது 
காதல் சோடிகளின் -முகங்கள் ,

இல்லறத்தில் இணைந்த 
புதுமன தம்பதிகளின் -முகங்கள் ,

கைபேசியில் முத்தமிட்டு
 உறவாடும் உறவுகளின் -முகங்கள்,

ஸ்கைப்பில்  வதனம் 
நோக்கி மகிழ்வுறும் -முகங்கள் ,

ஆலயங்களில் இறைவனை 
தேடும் ஒரு குழாமின் -முகங்கள் ,

செக்கனுக்கு மூன்று முறையாவது 
இறை நாமத்தை ஜெபிக்கும் -முகங்கள்,

ஈற்றில் உறவுகளுடன் இணைய 
துடிக்கும் -முகங்கள் ,



கால நிலைகூட மாயனுக்கு 
துணை  போக - சற்று வியந்தேன் 

எதுக்கும் அஞ்சாது தம் பொம்மைகளுடன்  
சிரித்து  கொண்டு விளையாடும்
 மழலையின்-   சிரிபொலியில்

விடை தெரியா புதுருக்காய் 
நானும்  (kayu) காத்திருக்கிறேன் - உங்களுடன்




















Saturday, October 20, 2012

மாற்றான்..

நான் பார்த்த திரைப்படங்களில் வெளியாகி எட்டு நாளுக்கு மேல் ஆகியும் ஹவுஸ் புல்  ஷோ (House Full Show) பார்த்த அனுபவத்தை அளித்தது மாற்றான் .. 

இந்த படத்தை பார்க்க முன்னர் நான் சாருலதா படத்தையும் பார்த்து விட்டேன் 

இயக்குனர்   K. V. ஆனந்த் படத்தை பற்றி ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார் "இந்த கதை சூர்யாவின் அயன் இயக்க முதலே கதையை அவரிடம் சொன்னரும் சில காரணங்கள் அது எடுக்க முடியவில்லை , இருப்பினும் ஏழாம் அறிவின் பினர் சூர்யாவே இந்த படத்தை ஆரம்பிப்பம் என்று சொன்னார்" ..

இதன் வடிவமே மாற்றான் ..


படத்தில் சூர்யா பாரிய கடையமை செய்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் முதல் பாதி அதுவும் கிட்டதட்ட 90 நிமிடங்கள் ரெட்டயரை கொண்டே  காட்ச்சியமைக்க பட்டுள்ளது. அதில் இருவரும் இரு விதமான செயற்ப்பாடுகளை கொண்ட  ஒட்டி பிறந்த ரெடடையர்கள்   ஒவ்வொரு திரைச்சட்டமும் (Frame) மிகவும் கடினமானது அதை  செவ்வனவே நடித்துள்ளார் . 



இரு குணங்களை உடைய இருவரையும் ஒரே திரை ச்சட்டத்க்குள் (Frame)  ிக அழக நடித்துள்ளார் அதில் ஒரு சண்டைகாட்சி வேற உள்ளடக்கபட்டுளது ..  சூர்யா க்கு நடப்புக்கு சாபஸ் போடத்தான் வேண்டும் .

நாயகி கஜல்  அக்கர்வால்  க்கு இந்த படத்தில் பாரிய பகுதி கொடுத்துள்ளார் இயக்குனர் , அதை நாயகியும் மிக அழகாக நிறைவேற்றி உள்ளார் ஏனெனில் இரு குணங்களை உடைய இருவருடன் நடிக்க வேண்டும் அதுவும் முதல் திரைப்பாதியில் இவரும் அதிகம் கஸ்ரப்பட்டு இருக்கிறார் . கஜல் க்கும் சபாஸ் தான் சகுனியுடன் ஒப்பிடும் போது


இயக்குனர் K. V. ஆனந்த் யின் நான்காவது படம் மிகவும் அதிக சவால் எடுத்து இயக்கிய படம் என்றால் மிகையில்லை , அதுவும் துணிச்சலுடன் முதல் பாதி வரைக்கும் இரட்டையரை கொண்டு கதை அமைத்தமை . அது சில சமயம் நிண்ட நேரம் போல தோன்றினாலும் அவரின் இம்முயற்ச்சிக்கு ஒரு சாபஸ் தான் .


இறுதி பாதியில் வரும் சண்டைக்காட்சி தான்  எதோ அடுத்த விஜயகாந்து தான் சூர்யா என  எண்ண தோன்றுகிறது அதை கொஞ்சம் யதார்த்தமாய் எடுத்து இருக்கலாம் .

மேலும் இயக்குனர் K. V. ஆனந்த் என்றாலே காட்சிகள் அமைக்கப்பட்ட இடம் தான் கவனத்தில் கொள்ளப்படும்  ஏனெனில் அவரின் திரையுலக அறிமுகமே ஒரு கேமரா மன் ஆக தான் அதுக்கு ஏற்றப பாடல்கள் மிக அழகா காட்சியமைத்துளார்  அதுவும் ,

 "நாணி  கோணி ..."பாடல் மிக அழகாக திரையாக்க பட்டுள்ளது . சூர்யா மற்றும் கஜலின் நடிப்பு பாடல் காட்சிகளில் ம் ம் ம் ம் ..



ஹாரிஸ்  ஜெயராஜ் யின் இசையில் பாடல்கள் ஒரே பாணியிலான இசையாயினும் பிரம்மதம் தான் .. காட்சியமைப்புடன் பின்னி போது சபாஸ் தான் ..

பாடல் வரிகள் எல்லாமே கதைக்கு சமாந்திரமாய் செல்கிறது அதுவும் தாமரையின் 
 இந்த வரி ..(அதுவும் திரையில் கஜலின் புன்னகை ம் ம் ம் ம் )



"முகத்திரை  அதை  தள்ளி  பார்த்தல் 
முறைக்கிறாய்  நீ  நின்று 
கனகாம்பர  இதழை  விரித்து 
குறும்பாய்  ஒரு  சிரிப்பை உதிர்த்து 
திரும்பாமலே  நடந்தால்  சென்றால்  எது  மிஞ்சும் .."


தாம் ஏற்ற சவாலில் சூர்யா மற்றும் இயக்குனர்  80%  விதம் வெற்றியடைந்து உள்ளனர் 



முழுக்கதையை நோக்கின் படத்துக்கு சபாஸ் தான் 


Saturday, September 22, 2012

காதல்


எனது எண்ணத்தில் தோன்றிய  காதல் பற்றிய எண்ண ஓட்டத்தை இவ்வலைப்பதிவில்  வரைகிறேன் .



காதல் பற்றி பல காவியங்கள் ஆண்டு ஆண்டு காலம் கூறி வந்தன, வருகின்றன , வரும் . எத்தனையோ ஜம்போவங்களின் காவியங்கள் காதலை எளிமையாகவும் அழகாவும் விபரித்து உள்ளது .



என்னில் தோன்றிய சில எண்ண கருத்துகள் இவை  நான் பார்த்த திரைக்காவியங்கள் , படித்த காதல் காவியங்கள் மற்றும் நிஜ வாழ்க்கையில் கண்ணுடாக கண்டவை , என்னில் ஏற்படுத்திய மன தாக்கங்கள் .

காதல் இவ் முன்றேழுத்தில்   தான் உலகமே இருக்கிறதாய்  நானும் உணர்கிறேன் . காதலின் எளிமை வடிவமே அன்பு. இவ்வுலக ஜீவராசிகள் எல்லாம் ஏதோ தம்மையறியாமல்  அன்பு என்னும் சிறைக்குள் சிறைபடுத்தியே உள்ளன .



ஓ ஓ.. இன்றைய காலத்தில் காதல் எனும் வடிவத்துக்கு வருகிறேன் .. ஏனெனில் இதவே நான் அனுபவித்தது.., அனுபவிக்கிறேன் . சிறு பராயம் (1-8 வயது ) இக்கால கட்டம் மிகவும் அழகானதும் எளிமையனதுமான வாழ்க்கை காலம் இதை அவ்வயதில் எம்மால் உணர முடிவதில்லை பின்னர் சிந்திக்கும் போது தான் அக்காலம் எவ்வளவு இனிமையானது என்று எமக்கு புரியும் . 



பள்ளிப்பருவம் இது தான் காதல் எனும் பதத்தை அறிமுக படுத்தும் எம்முள் , பருவ மாற்றம் ,ஓமோன்கள் சுரக்கும் ஆற்றல்கள் அதிகரிக்கின்றமை இவ் இயற்க்கை வளர்ச்சி இரு பாலர் மத்தியிலும் ஈர்ப்பை ஏற்ப்படுத்துகிறது .

பள்ளிக்காதல் ம்ம் ம்ம்ம். இதை பற்றி நினைத்தால் என்னுள் தோன்றுவதும்       "" பள்ளிக்காதல் படலை வரை .."" என்ற வரியே ..

என் வாழ்வின் அனுபவத்தில் கூட ஏற்றபட்ட  முதல் ஈர்ப்பு ..ம்ம்ம் ம்ம் ..  இருப்பினும் இது காதல் இல்லை பருவ ஈர்ப்பு என்பதை பின்நாளில் உணர்ந்தேன் . 



 இருப்பினும்  சிலரின் அவ் ஈர்ப்பு பின்நாளில்  மெய்க்காதல் ஆகி  வாழ்வில் இணைந்தவரும் உள்ளனர் . அதே போன்று  அவ் ஈர்ப்பை உணராமல் அதில் மனம் உடைந்து  தம் இலக்கை இழந்து வாழ்வில் தோற்றவர்கள் போல் தம்மை மாற்றியவர்களும் இருக்க தான் செய்கின்றனர் . சிலர் வாழ்க்கையை முற்றாக துறந்தவர்களும் இருக்க தான் செய்கின்றனர் .

இள வயது பராயம் அதுவும் பள்ளி பருவம் முடிந்த காலம் . இது தான் ஆணோ பெண்ணோ ஓர் உறவை தம்மை அறியாமல் தேடும் காலம் என நினைக்கிறேன் . பெரும்பாலும் ஆண்களும் பெண்களும் வேலைக்கோ , மேற்ப்படிப்பை தொடரும் காலம் அதுவே அவர்களுக்கு களமாக அமைகிறது . பலரும் பலவற்றை தாம் காதலிப்பதற்கு ஊடகமாய் பயன்படுத்துகின்றனர் . இன்றைய காலத்தில் முகப்புத்தகத்தை காதலுக்கு ஊடகமகாவோ , களமாக பயன்படுத்துகின்றார் .

ம்ம் ம்ம்ம் ..என்னில் உதயமாகிறது  என் தோழமை பட்டாளத்தில் ஒருவரின் காதல் தான் அதுவும் முகப்புத்தாக அரட்டை (Facebook Chat) களமாய் அமைந்தது .



காதல் ஒருவனை ரசனை உடையவனாய்   மாற்றும் அது உண்மையே . என்னையும் மாற்றியது  ஓர் உறவு  (அழுத்தவும் )

(காதல் பற்றிய இன்னும் பகிர நானும் இன்னும் கடக்க வேண்டிய காலங்கள்  உள்ளன . காலம் கடந்து காலம் கை கொடுத்தல் உங்களோடு பகிர்கிறேன்...)

காதல் அழகான  உலகமே 




Tuesday, July 31, 2012

வாழ்க்கை ஓர் ராட்டினமே ..

ராட்டினம்.." வாழ்க்கை ஓர் ராட்டினமே .."


தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைக்கிறார் புதுமுக இயக்குனர்  தங்கசாமி ராட்டினம் வாயிலாக .. இள  வயது காதலை ததுவருவமாய் செதுக்க  முயன்றார் .அதில் முன்றில் இரண்டு பகுதியை நிறைவேற்றியுள்ளார் , 






தூத்துக்குடி இலே கதைக்கு களமாக்கினார் . 


கதையின் கருவை மிகவும் அழாகாக சொல்ல முயல்கிறார் ரசிகர்களுக்கு "ஆழமான காதலின் வெற்றி அல்லது தோல்வியின் பின்னல் ஓர் காரணம் உண்டு அது உறவாகவோ அல்லது அதனையும் தாண்டியதாய் அமைகிறது  "



Saturday, July 7, 2012

என் பார்வையில் சகுனி ..


இயக்குனரும் திரைக்கதையாலருமான Shankar Dayal யின் முதல் வெளியான தமிழ் திரைப்படம் . இவரின் முதல் திரைப்படமான  அனந்தம்  ஆரம்பம் வெளிவராமல் விட 2011 இல் இத்திரைப்படத்தை  கார்த்தியை நாயனாக கொண்டு ஆரம்பித்தார் .


(இந்த படத்தை நான் முதலில் யாழ் -கொழும்பு பஸ் ல  பார்த்தேன்  இருப்பினும் திரையரங்கில் சென்று பாக்கோணும் போல் இருந்தது .)

நாயகன் கார்த்தியை அறிமுகத்தை  பாட்டி   வடை சுட்ட கதை ஒரு காக்க வடையை கொண்டு பறப்பதும் அது தவறி விழுந்ததும் அதை மீண்டும் எடுத்து போடுவதுமாய் கட்டுகிறார் இயக்குனர், இந்த சந்தர்ப்பத்தில் கேமரா மான் சென்னை மாநகராட்சியின் நிலையை  தன் திரைக்குள் கொண்டு வர முயல்கிறார் அதை தான் இயக்குனரும் விரும்புகிறார் போல் இதை பல தமிழ் திரை இயக்குனர்கள் செய்துள்ளனர் .


கிரியின் நினைவு பகிர்வு


நான் வலைப்பதிவு எழுதோனும் என்ற பல நாள் கனவு ...ஏதோ இறைவனின் விதியால் ஒரு நண்பன்/சகோதரன் இன் நினைவுகள் எழுதுவேன் என்று  கனவில் கூட நினைக்க வில்லை . 

என்னுள்.. !! ஏன்..?? எம்முள் பல நினைவுகளை தந்து இறைவன் அவனை இடையில் பறித்து சென்றான் ..அவனின் நினைவுகள் சிலவற்றை இதனுடாக பகிரலாம் என்று நினைக்கிறேன் ..

கிரி ஜூனியர் ஆக எமது பல்கலைக்கழகத்திற்கு கணினி விஞ்ஞானம் (Computer Science)படிக்க இணைந்தான்.அதிலும்  ஓர் சிறப்பு என்னவென்றால்  எமது தமிழ் சமூகத்தில்(UCSCTS) ஓர் உறவு இணைந்தது தான் , 

கண்காட்சியின் (ifo++) போது..

கிரியுடன் நான் ஆரம்பத்தில் கதைத்ததை விட நான் முதல் முதலாக அவனுடன் அதிகம் கதைத்து பேசியது எமது கல்லூரி கண்காட்சி (ifo++).அதில் தான் அவன் என்னோடு அதிகம் கதைத்து பேசிய நாட்கள்.  மூன்று தினங்களும்  கதைத்து பேசியது தான் அவனுடன் ஏதோ நெடு நாள் பழகிய உணர்வை தந்தான் .
.
  • எதையும் தெளிவாகவும் , அழமையும் பேசுவான் . 
  • அத்துடன் எம் சமுகத்தில் அதிகம் பற்று உள்ளவன் என்பதையும்  அறிந்தேன் .


சில நிழற்ப்படங்கள் கண்காட்சியின் (ifo++) போது..



















அடுத்ததாக எமது வாணி விழாவின் போது ..

இதில் தான் என் சகோதரன் போல் அவன் என்பதை உணர்ந்தேன் ஏன் எனில் எனக்கு  வேட்டி  கட்டி விட்டது கிரி தான் . அதில் அவன் பாடிய வில்லு  பாட்டால்  என்றும் என் நினைவை விட்டு நீங்காமல் இருக்கிறான் .எதையும் நகைச்சுவையாக பேசுவதிலும் மிக சிறந்தவன் என்பதையும்  அறிந்தேன் 

 







சுற்றுலாவின்  போது ..

நாமும்  எமது  ஜூனியர்கள் உம் சென்ற சுற்றுலா .., கிரியும் எம்முடன் வந்தான் ..




எப்போதும்  என்னை காணும் பொதுவும் எதாவது கதைத்து தான் செல்வான் . 

சில நினைவுத்துளிகள் ..
  • ஒரு முறை எமது கல்லூரியில் நான் மேடையில் அறிவுப்பு நிகழ்த்தினேன் அதன் பிறகு என்னிடம் வந்து கூறினான் "என்ன அண்ணா அவர் எல்லாம்  மூன்று  எழுத்து  என்று சொல்லிறார் , நீங்க அவர ஏதோ சைவத்தின் பெருமையை பேசினத சொல்லிட்டு வாரிங்க  "

  • வெள்ளவத்தையில் நானும் கிரியும்  கதைத்தோம்  ,அதுவும் பரீட்சை நேரம் அச்சந்தர்ப்பத்தில் கூறினான் "ஏன் வித்தியாசமாக வாழோணும்..!! , பத்தோடு ஒன்று பதினொன்றாய் நாமும் வாழுவோம்"

  • ஒரு சந்தர்ப்பத்தில் கூறினான் அதுவும் நான் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகம் சென்ற ஒன்றியம் பற்றி மற்றவர்களுடன் கதைத்து கொண்டு இருந்த போது"எமது நாட்டில் ஒரு ஒன்றியம் தான் இருக்கோணும் "
கிரி என்னில் பதித்த சில நினைவுகளை பகிர்ந்தேன் ஈற்றில்  டெங்கு என்னும் கொடிய ஆட்க்கொல்லி அவனை எம்மை விட்டு இறைவனிடம் சேர்த்தது ...


உன்னுடன் நான் பழகிய நாட்கள் 
விரல் விட்டு கூட எண்ணிவிடலாம் -கிரி 

நீ எமக்குள் தந்த நினைவுகள் என்றும் நீங்குவதில்லை .
வாய்ச்சொல்லில் வீரன் நீயடா - நீ 
எதையும் எளிமையும் , ஆழமாயும் பேசுவாய் 
அதில் ஒன்று -
"ஏன் வித்தியாசமாக வாழோணும்..!! , 
பத்தோடு ஒன்று பதினொன்றாய் நாமும் வாழுவோம் ".

இந்த வேற்று உடல் போகினும்- நீ
என்றும் எம்முடன் ..


என் சகோதரனாய் ....தோழனாய் ... 




உன் ஆத்மா சாந்தி அடையட்டும் ..

என் நண்பனை / சகோதரனை  போன்று நீங்களும் உங்கள் உறவுகளின்  உயிரை பறி கொடுக்காதிர்கள்..



டெங்கு ஆபத்தான ஆட்க்கொல்லி அனைவரும் எச்சரிக்கையாய்  இருக்க வேண்டும்   ...!!!