வைரமுத்தின் வரிகள்

விடியாது இரவென்று எதுவுமில்லை ,முடியாத துன்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை,வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

கண்ணதாசனின் வரிகள்

உன்னை அறிந்தால் -நீ உன்னைஅறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

தத்துவம்

வெற்றி பெறுவது மிகவும் எளிதானது . என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய் .செய்வதை விரும்பி செய் .செய்வதை நம்பிக்கையோடு செய்.

புத்தரின் வரிகள்

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

தத்துவம்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால், நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.

Friday, March 6, 2015

ஸ்வர்ணலதாவின் குரலில் ஓர் மயக்கம்

இசைக்கு கிடைத்த மிக பெரிய சொத்து , ஆயிரம் குரல்கள் வந்து போனாலும் இந்த குரலிலும் எனக்கு ஓர் பிடிப்பு , என்னையும் இசையில் உருக்கிய பாடல்களுக்குள் சிலவற்றை இந்த பதிவினுடாக

ஸ்வர்ணலதா என்றவுடன் எந்த இசை ரசிகனும் முதலில் முணுமுணுப்பது இந்த பாடல்

எ.ர.ரஹ்மானின் இசையும் ,வைரமுத்து ஐயாவின் பாடல் வரியும் ,ஸ்வர்ணலதாவின் அனுபவித்து பாடிய விதமும்
சொல்லவே தேவை இல்லை .நிச்சயமாய் தேசிய விருதுக்கு சாலச் சிறந்தது





( இந்த படலை கேட்டதும் ஸ்வர்ணலதாவின் ஞாபகம் வரும் என்று , எனக்கு தெரிந்த அண்ணா ஓர்  இந்த பாடலை கேட்பதும் இல்லை )

இசைபுயலில் வரிசையில் அடுத்த பாடல் இது , அதுவும் இந்த பாடலை இரவு நேரங்களில் வாகனத்தில் பயணம் செய்யும் போது கேட்க  பிடிக்கும் அது என்னவோ தெரியவில்லை அவ்வாறான நிலையில் இந்த பாடல் என்னை எங்கோ கொண்டு செல்லும்



உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா இணைந்து இரு இதயங்களை குளிர்ச்சி அடைய செய்த  பாடல்  , இந்த பாடலையும் இவ்வாறன ஓர் நிலையில் கேட்ட பிடிக்கும்  மழையானது நன்றாக பெய்ய வேண்டும்  கண்ணாடியினுடாக மழையை ரசித்து கொண்டு மழையின் சாரல் கண்ணாடி எங்கும் பரவி கிடக்க வேண்டும்



இசை புயலின் இசையில் அம்மா பாடிய இன்னும் பல பாடல்கள் உள்ளன எல்லாவற்றையும் பதிவிடின் எந்த பதிவு ஒன்று போதாது ஆயினும் எனக்கு பிடித்த முதல் மூன்று பாடலும் இதுவே .

--------------------------------------------------------------------------------------------------------------------------

இசைஞானியின் இசையில் என்னால் வரிசை படுத்த முடியாது பிடித்ததில் சில பாடல்கள்


ஸ்வர்ணலதா  முடிக்க

என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு ... 

என்று முடிக்க பின் , S.P.B ஐயா தொடர

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே ...
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே ...
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ...





மீண்டும் S.P.B ஐயா தொடர

வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே

ஸ்வர்ணலதா  முடிக்க

திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே




மீண்டும் S.P.B ஐயா தொடர

கற்பனையில் மெதக்குது கண்டதையும் 
ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்

ஸ்வர்ணலதா  முடிக்க



ரத்தினங்கள் தெரிகுது முத்துமணி 

ஜொலிக்குது நடந்திடு நதியிலே


இவ்வாறு S.P.B மற்றும் ஸ்வர்ணலதா   அம்மாவின் பாடல்களை அடுக்கலாம்