வைரமுத்தின் வரிகள்

விடியாது இரவென்று எதுவுமில்லை ,முடியாத துன்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை,வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

கண்ணதாசனின் வரிகள்

உன்னை அறிந்தால் -நீ உன்னைஅறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

தத்துவம்

வெற்றி பெறுவது மிகவும் எளிதானது . என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய் .செய்வதை விரும்பி செய் .செய்வதை நம்பிக்கையோடு செய்.

புத்தரின் வரிகள்

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

தத்துவம்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால், நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.

Saturday, September 13, 2014

நீயா இது !! நானா இது !! உள்ளே ஒரு போராட்டம்

ஓர் பதிவின் தொடர்ச்சியை இந்த பதிவினுடாக தொடர்கிறேன் , நேற்று திருமணம்  என்னும்  நிக்காஹ் திரைப்படம் பார்த்தேன் .

இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் எதுவென , சரி நானும் ஒரு சஸ்பேன்ட் வைப்பமே ,

ஒரு ஆண் எப்பவும் இவ்வாறான பண்புகள் உள்ள ஒரு பெண் தான் காதலியாய் / மனைவியாய் அமைய வேண்டும் என்று விரும்புகிறான்

இதில் நான் காதலி அல்லது மனைவி  என்று குறிப்பிட்டேன் , ஏன் எனில் ; சிலருக்கு அவ்வாறன காதலி அமையும் ஆயினும் மனைவி அவ்வாறு அமையாது , இலையேல் சிலருக்கு காதலி அவ்வாறு அமையாது ஆயினும் மனைவி அவ்வாறு அமையும்

கொஞ்சம் இருங்க நான் ஒன்றும் தப்ப சொல்லவில்லை "பெரும்பாலும் காதலி ஒன்றும் மனைவி வேறு ஒன்று அமைகிறது இது யதார்த்தமானது இல்லையேல் அதுவே வழமையாய் இருக்கிறது  "


இதற்க்கு சாட்சியாய் என் சில நண்பர்கள் , சமுக வலைத்தளங்கள் மற்றும் சமுகத்தை குறிப்பிடலாம்

இதில நான் எந்த கட்சியும் இல்லையங்கோ ; அத விடுங்கோ நான் விடயத்துக்கு வருகிறேன்


  1. அழகாய் இருக்கோணும் இல்லை அவனுக்கு ,  அவள் முதல் பார்வையிலே தேவதை போல் தோன்ற வேண்டும் - இதை எவரும் மறுக்க முடியாது அவ்வாறு மறுப்பார் ஆயின் அவர்கள் பொய் சொல்கிறார்கள்           எத்தனை கவிதைகள் வலு சேர்க்கும் 
  2. நல்ல குணம் - இது எப்படியம் இரண்டாவது தான் முதலாவதுடன்  ஒப்பிடுகையில் - தாரம் என்பது ஓர் ஆணின் இரண்டாவது தாய் அதுவே இதற்க்கு உறுதுணையாய் இருக்கும்                                                (இதில் பணிவு , பண்பு  , மேலும் பல அடங்கும் )
  3.  தன்னுடன் ஒத்து போகுவளாய் மனைவி அமைய வேண்டும்  -  அவளின் பாத்திரம் (character )
  4. பெண்ணுக்குரிய கடைமைகளை நிறைவேற்ற குடியவளாய் அமைதல் வேண்டும் .இதை இப்ப பெண்களுடன் எதிர்பார்ப்பதே கடினம் ; பெண்களே நான் யதாரத்தை சொன்னேன் 

இவை என்னில் தோன்றியவை , இந்த வலைப்பதிவை வாசிப்பவர் எவராயினும் (நிச்சயம் நீங்கள் அனுபவசாலியாய் இருப்பீர்கள் ) , இதைவிட வேறு ஏதும் இருப்பின் நிச்சயம் பின்னுட்டல் (comment ) இடலாம்.

அதுக்கு தானே நம்ம கூகுளே அந்த அமைப்பை தந்துள்ளது

நிச்சயம் நீங்களும் இதற்க்கு உடன் படுவீர்கள் ;

சரி மேலே குறிபிட்ட படத்துக்கும் , என் முன்னைய பதிவுக்கும்  நஸ்ரியாவுடன் நாழிகைகள்  என்ன சம்பந்தம் ; இரண்டுலையும் நஸ்ரியா தான் இருக்கிறா அவ்வளவு தான்  வேற  ஒன்றும் இல்லை . 

அந்த பொண்ணுக்கு திருமணமும் நடந்து முடிந்திட்டு ; என்னுள் நான்;; என்ன செய்ய எல்லாம் அவன் செயல் !!!

அந்த படத்தில கதாநாயகன்  முதல் கதாநாயகியை காணும் போது ஒரு பாடல் வரும் அப்போது என் மனதில் தோன்றிய விடயத்தை பகிர்ந்தேன்

 Wait  ::  இது தானே எல்லா தமிழ் படத்திலையும் வருகுதே அப்போது எல்லாம் வராம இப்ப உனக்கு தோன்றுதோ என்று கேட்கிறீங்க

எனக்கு Ghibran  இன் இசையில் வரும் இந்த பாடல் பிடித்தது அவ்வளவு தான் ;



அதுவும் இந்த இடங்கள் (0:18s -> 0:49s;set  video quality as HD )

கண்டே மனம் திக்காதோசொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டேதொண்டைக் குழி விக்காதோஎன்னன பேச எப்படி பேசஒத்திகைப் பார்த்தேனேநீ புன்னகை பூத்தால்பத்திரமாக சேமித்து வைப்பேனேஇன்று பூமியில் பூக்கும்வானவில் வண்ணம் கண்முன்னே கண்டாச்சுஅதில் சந்தன கொஞ்சம் மஞ்சளைசேர்த்தால் உன் முகம் உண்டாச்சு
குறிப்பு : 

இயன்றவரை தமிழ் எழுத்துபிழைகளை குறைக்க முயல்கிறேன் 

இந்த வலைப்பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் ஒரே தொடர்பு பாடலின் ஓர் வரி அது மட்டுமே