வைரமுத்தின் வரிகள்

விடியாது இரவென்று எதுவுமில்லை ,முடியாத துன்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை,வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

கண்ணதாசனின் வரிகள்

உன்னை அறிந்தால் -நீ உன்னைஅறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

தத்துவம்

வெற்றி பெறுவது மிகவும் எளிதானது . என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய் .செய்வதை விரும்பி செய் .செய்வதை நம்பிக்கையோடு செய்.

புத்தரின் வரிகள்

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

தத்துவம்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால், நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.

Friday, July 12, 2013

காதல் சொன்ன திரைக்காவியங்கள்

Susindran இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு , இந்த திரைப்படம் காதலை எளிமையும் யதார்த்தமும் கலந்த ஒரு படம் தான் , கபடி விளையாட்டை படத்தின் களமாய் எடுத்து படம் அமைக்க பட்டாலும்



கிராம சாயலிலான ஒரு காதலை திரைப்படத்தில் கோர்த்து படம் ஆக்கியமை மிகவும் அற்புதம் அதுவும் இந்த பாடல்,



ஒவ்வொரு பிரமே (frame in movie ) உம் காதலை அழாகாக வெளிபடுத்தியது.


 " பெண்ணின் ஒவ்வொரு கருவிழி அசைவும் "

" முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் வதனம் பார்க்க பின்னால் வந்து காதலன் தன் முகம் பார்க்க வெட்க்கப்படும் தருணம் "

" காலில் அணிந்து  இருக்கும் கொலுசின் சிணுங்கள் "

" திருவிழா கூட்டத்தில் காதலனை தேடும் விழிகளும் , காதலியை தேடும் விழிகள் "

" அவளின் காதணி யின் அசைவு "



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



Balaji Sakthivel இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18/9 , இந்த திரைப்படம்  இரு  வறுமையின் காதலை யதார்த்தமும் கலந்த விருந்தளித்த  ஒரு படம் தான் , இன்றைய இளைஞர் கள் மற்றும் யுவதிகளின் உண்மை நிலையை   படத்தின் களமாய் எடுத்து படம் அமைக்க பட்டாலும்



வறுமையின் செல்வந்த காதலை   திரைப்படத்தில் கோர்த்து படம் ஆக்கியமை மிகவும் அற்புதம் அதுவும் இந்த பாடல்




இந்த பாடல் ஏழையின்  காதலை அழாகாக வெளிபடுத்தியது

காதலனை  காணும் போது காதலி ஏழைக்கு உரிய பாணியில் பயம் கலந்த வெட்கத்தில் செல்வது "

" காதலியின் ஒரு படத்தை பேர்சில்(Purse)  வைத்து பார்த்து ரசிப்பது "

" காதலன் கற்பனையில் காதலியுடன் வாழ்வது போன்று கனவு காண்பது "

" கானாவிலும் அன்பை பரிமாறி வாழும் வாழ்க்கை "


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

2012 ஆம் ஆண்டு வெளிவந்த K.S.Thangasamy  யின் ராட்டினம்  ,

ஆழமான காதலின் வெற்றி அல்லது தோல்வியின் பின்னல் ஓர் காரணம் உண்டு அது உறவாகவோ அல்லது அதனையும் தாண்டியதாய் அமைகிறது 



படத்தின் வரும் இப்பாடல் ஒரு பள்ளி காதலை கன்னியமாய் வெளிபடுத்தும்



"அவளின் முகவசைவு ஒவ்வொன்றும் ஆயிரம் காதல் மொழிகள் பேசுதல்"

"மோட்டார் பைக் இல் அவளின் நினைவில் செல்லுதல்"

இது நம்மள நிறைய பசங்களுக்கு நடந்து இருக்கு பட் வெளியில காட்டி கொள்ள மாட்டாங்க
"அவளின் புன்னைகையை ரசிக்கும் காதலன் "


"இருவரும் சந்திக்கும் போது மெலிதான நலினமுடைய காதல் பார்வை "

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

2009 ஆம் ஆண்டில் Pandiraj யின் கலை வண்ணத்தில் வெளிவந்த திரைப்படம் பசங்க , சிறுவர்களுக்கான பிரச்சினைகள் அவர்களின் அறியமையால் இது எவ்வாறு பெரியவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது .



இருப்பினும் இதில்  காதல் ஒன்றை செல் போன் வாயிலாக பிணைந்துள்ளார் ,அதுவும் இந்த பாடல்



"காதலியை போட்டோ பிடிப்பது (PAPER CAMERA) , காதலின் சிறு குறும்பு"

" மழையில் செய்யும் குறும்பு தனமா காதல் விளையாட்டு "

" வைரமுத்துவின் கவிதையை காதலிக்கு அஞ்சலிடுவது தான் எழுதியது போல் "


" காதலியுடன் விழியால் பேசும் காதல் மாயம் "

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இவரிசையில் மேலும் சில

  • ஆடுகளம்
  • களவாணி



விமல் அண்ணாவின் திருமண வைபத்தில் செந்தூரன் அண்ணாவுடன் சம்பாசனையில் திடீர் என உதிர்த்த ஒரு டொபிக்

காதலை காதலாக திரைக்குள் உள் வாங்கிய படம் அதுவும் அவர் சொன்ன இன்னுமொரு விடயம்

" இந்த galle face மற்றும் park இல் காதல் எனும் போர்வையில் காதலை கொலை செய்வோருக்கு இதிரைபடங்களை திரையிட்டு காட்ட வேண்டும்  "

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

விழிகள் பேசியது
வார்த்தைகள் தடுமாறியது
கனவுகள்  போட்டியிடுகிறது
 - காதலில்