வைரமுத்தின் வரிகள்

விடியாது இரவென்று எதுவுமில்லை ,முடியாத துன்று எதுவுமில்லை வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை,வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

கண்ணதாசனின் வரிகள்

உன்னை அறிந்தால் -நீ உன்னைஅறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

தத்துவம்

வெற்றி பெறுவது மிகவும் எளிதானது . என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய் .செய்வதை விரும்பி செய் .செய்வதை நம்பிக்கையோடு செய்.

புத்தரின் வரிகள்

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

தத்துவம்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால், நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.

Saturday, September 22, 2012

காதல்


எனது எண்ணத்தில் தோன்றிய  காதல் பற்றிய எண்ண ஓட்டத்தை இவ்வலைப்பதிவில்  வரைகிறேன் .



காதல் பற்றி பல காவியங்கள் ஆண்டு ஆண்டு காலம் கூறி வந்தன, வருகின்றன , வரும் . எத்தனையோ ஜம்போவங்களின் காவியங்கள் காதலை எளிமையாகவும் அழகாவும் விபரித்து உள்ளது .



என்னில் தோன்றிய சில எண்ண கருத்துகள் இவை  நான் பார்த்த திரைக்காவியங்கள் , படித்த காதல் காவியங்கள் மற்றும் நிஜ வாழ்க்கையில் கண்ணுடாக கண்டவை , என்னில் ஏற்படுத்திய மன தாக்கங்கள் .

காதல் இவ் முன்றேழுத்தில்   தான் உலகமே இருக்கிறதாய்  நானும் உணர்கிறேன் . காதலின் எளிமை வடிவமே அன்பு. இவ்வுலக ஜீவராசிகள் எல்லாம் ஏதோ தம்மையறியாமல்  அன்பு என்னும் சிறைக்குள் சிறைபடுத்தியே உள்ளன .



ஓ ஓ.. இன்றைய காலத்தில் காதல் எனும் வடிவத்துக்கு வருகிறேன் .. ஏனெனில் இதவே நான் அனுபவித்தது.., அனுபவிக்கிறேன் . சிறு பராயம் (1-8 வயது ) இக்கால கட்டம் மிகவும் அழகானதும் எளிமையனதுமான வாழ்க்கை காலம் இதை அவ்வயதில் எம்மால் உணர முடிவதில்லை பின்னர் சிந்திக்கும் போது தான் அக்காலம் எவ்வளவு இனிமையானது என்று எமக்கு புரியும் . 



பள்ளிப்பருவம் இது தான் காதல் எனும் பதத்தை அறிமுக படுத்தும் எம்முள் , பருவ மாற்றம் ,ஓமோன்கள் சுரக்கும் ஆற்றல்கள் அதிகரிக்கின்றமை இவ் இயற்க்கை வளர்ச்சி இரு பாலர் மத்தியிலும் ஈர்ப்பை ஏற்ப்படுத்துகிறது .

பள்ளிக்காதல் ம்ம் ம்ம்ம். இதை பற்றி நினைத்தால் என்னுள் தோன்றுவதும்       "" பள்ளிக்காதல் படலை வரை .."" என்ற வரியே ..

என் வாழ்வின் அனுபவத்தில் கூட ஏற்றபட்ட  முதல் ஈர்ப்பு ..ம்ம்ம் ம்ம் ..  இருப்பினும் இது காதல் இல்லை பருவ ஈர்ப்பு என்பதை பின்நாளில் உணர்ந்தேன் . 



 இருப்பினும்  சிலரின் அவ் ஈர்ப்பு பின்நாளில்  மெய்க்காதல் ஆகி  வாழ்வில் இணைந்தவரும் உள்ளனர் . அதே போன்று  அவ் ஈர்ப்பை உணராமல் அதில் மனம் உடைந்து  தம் இலக்கை இழந்து வாழ்வில் தோற்றவர்கள் போல் தம்மை மாற்றியவர்களும் இருக்க தான் செய்கின்றனர் . சிலர் வாழ்க்கையை முற்றாக துறந்தவர்களும் இருக்க தான் செய்கின்றனர் .

இள வயது பராயம் அதுவும் பள்ளி பருவம் முடிந்த காலம் . இது தான் ஆணோ பெண்ணோ ஓர் உறவை தம்மை அறியாமல் தேடும் காலம் என நினைக்கிறேன் . பெரும்பாலும் ஆண்களும் பெண்களும் வேலைக்கோ , மேற்ப்படிப்பை தொடரும் காலம் அதுவே அவர்களுக்கு களமாக அமைகிறது . பலரும் பலவற்றை தாம் காதலிப்பதற்கு ஊடகமாய் பயன்படுத்துகின்றனர் . இன்றைய காலத்தில் முகப்புத்தகத்தை காதலுக்கு ஊடகமகாவோ , களமாக பயன்படுத்துகின்றார் .

ம்ம் ம்ம்ம் ..என்னில் உதயமாகிறது  என் தோழமை பட்டாளத்தில் ஒருவரின் காதல் தான் அதுவும் முகப்புத்தாக அரட்டை (Facebook Chat) களமாய் அமைந்தது .



காதல் ஒருவனை ரசனை உடையவனாய்   மாற்றும் அது உண்மையே . என்னையும் மாற்றியது  ஓர் உறவு  (அழுத்தவும் )

(காதல் பற்றிய இன்னும் பகிர நானும் இன்னும் கடக்க வேண்டிய காலங்கள்  உள்ளன . காலம் கடந்து காலம் கை கொடுத்தல் உங்களோடு பகிர்கிறேன்...)

காதல் அழகான  உலகமே