நான் வலைப்பதிவு எழுதோனும் என்ற பல நாள் கனவு ...ஏதோ இறைவனின் விதியால் ஒரு நண்பன்/சகோதரன் இன் நினைவுகள் எழுதுவேன் என்று கனவில் கூட நினைக்க வில்லை .
என்னுள்.. !! ஏன்..?? எம்முள் பல நினைவுகளை தந்து இறைவன் அவனை இடையில் பறித்து சென்றான் ..அவனின் நினைவுகள் சிலவற்றை இதனுடாக பகிரலாம் என்று நினைக்கிறேன் ..
கிரி ஜூனியர் ஆக எமது பல்கலைக்கழகத்திற்கு கணினி விஞ்ஞானம் (Computer Science)படிக்க இணைந்தான்.அதிலும் ஓர் சிறப்பு என்னவென்றால் எமது தமிழ் சமூகத்தில்(UCSCTS) ஓர் உறவு இணைந்தது தான் ,
கண்காட்சியின் (ifo++) போது..
கிரியுடன் நான் ஆரம்பத்தில் கதைத்ததை விட நான் முதல் முதலாக அவனுடன் அதிகம் கதைத்து பேசியது எமது கல்லூரி கண்காட்சி (ifo++).அதில் தான் அவன் என்னோடு அதிகம் கதைத்து பேசிய நாட்கள்.
மூன்று தினங்களும் கதைத்து பேசியது தான் அவனுடன் ஏதோ நெடு நாள் பழகிய உணர்வை தந்தான் .
.
- எதையும் தெளிவாகவும் , அழமையும் பேசுவான் .
- அத்துடன் எம் சமுகத்தில் அதிகம் பற்று உள்ளவன் என்பதையும் அறிந்தேன் .
சில நிழற்ப்படங்கள் கண்காட்சியின் (ifo++) போது..
அடுத்ததாக எமது வாணி விழாவின் போது ..
இதில் தான் என் சகோதரன் போல் அவன் என்பதை உணர்ந்தேன் ஏன் எனில் எனக்கு
வேட்டி கட்டி விட்டது கிரி தான் . அதில் அவன் பாடிய வில்லு
பாட்டால் என்றும் என் நினைவை விட்டு நீங்காமல் இருக்கிறான் .எதையும் நகைச்சுவையாக பேசுவதிலும் மிக சிறந்தவன் என்பதையும் அறிந்தேன்
சுற்றுலாவின் போது ..
நாமும் எமது ஜூனியர்கள் உம் சென்ற சுற்றுலா .., கிரியும் எம்முடன் வந்தான் ..
எப்போதும் என்னை காணும் பொதுவும் எதாவது கதைத்து தான் செல்வான் .
- ஒரு முறை எமது கல்லூரியில் நான் மேடையில் அறிவுப்பு நிகழ்த்தினேன் அதன் பிறகு என்னிடம் வந்து கூறினான் "என்ன அண்ணா அவர் எல்லாம்
மூன்று எழுத்து என்று சொல்லிறார் , நீங்க அவர ஏதோ சைவத்தின் பெருமையை பேசினத சொல்லிட்டு வாரிங்க "
- வெள்ளவத்தையில் நானும் கிரியும்
கதைத்தோம் ,அதுவும் பரீட்சை நேரம் அச்சந்தர்ப்பத்தில் கூறினான் "ஏன் வித்தியாசமாக வாழோணும்..!! , பத்தோடு ஒன்று பதினொன்றாய் நாமும் வாழுவோம்"
- ஒரு சந்தர்ப்பத்தில் கூறினான் அதுவும் நான் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகம் சென்ற ஒன்றியம் பற்றி மற்றவர்களுடன் கதைத்து கொண்டு இருந்த போது"எமது நாட்டில் ஒரு ஒன்றியம் தான் இருக்கோணும் "
கிரி என்னில் பதித்த சில நினைவுகளை பகிர்ந்தேன் ஈற்றில் டெங்கு என்னும் கொடிய ஆட்க்கொல்லி அவனை எம்மை விட்டு இறைவனிடம் சேர்த்தது ...
உன்னுடன் நான் பழகிய நாட்கள்
விரல் விட்டு கூட எண்ணிவிடலாம் -கிரி
நீ எமக்குள் தந்த நினைவுகள் என்றும் நீங்குவதில்லை .
வாய்ச்சொல்லில் வீரன் நீயடா - நீ
எதையும் எளிமையும் , ஆழமாயும் பேசுவாய்
அதில் ஒன்று -
"ஏன் வித்தியாசமாக வாழோணும்..!! ,
பத்தோடு ஒன்று பதினொன்றாய் நாமும் வாழுவோம் ".
இந்த வேற்று உடல் போகினும்- நீ
என்றும் எம்முடன் ..
என் சகோதரனாய் ....தோழனாய் ...
உன் ஆத்மா சாந்தி அடையட்டும் ..
என் நண்பனை / சகோதரனை போன்று நீங்களும் உங்கள் உறவுகளின் உயிரை பறி கொடுக்காதிர்கள்..
டெங்கு ஆபத்தான ஆட்க்கொல்லி அனைவரும் எச்சரிக்கையாய்
இருக்க வேண்டும் ...!!!